ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள தெலுங்குப் படம் ‘ஸ்பைடர்’. மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் போட்ட பணத்தை லாபத்துடன் எடுக்க வேண்டும் என்றால், தெலுங்கு மட்டும் இன்றி தமிழிலும் படத்தை வெளியிட முடிவு செய்த தயாரிப்பு தரப்பு, தமிழிலும் இப்படத்தை நேரடிப் படமாக வெளியிடுகிறது.
இதன் மூலம், மகேஷ் பாபு நேரடியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாவதால், இப்படத்திற்கு அவரே தமிழ் டப்பிங் பேசியிருக்கிறார். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடத்தப்பட்ட ஸ்பைடர் இசை வெளியீட்டு விழாவில், மகேஷ் பாபுவின் ரசிகர்கள் திரளாக கலந்துக்கொண்டு பெரிய மாஸ் காட்டினாலும், தற்போது அந்த மாஸ் வெறும் தூசாகிவிட்டது.
ஆம், ஸ்பைடர் நேரடி தமிழ்ப் படம் என்ற விளம்பரத்தோடும், முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் என்ற விளம்பரத்தோடும் வெளியானாலும், தமிழகத்தில் தியேட்டர்கள் கிடைக்காமல் திண்டாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாதம் 27 ஆம் தேதி ஏகப்பட்ட தமிழ்ப் படங்கள் வெளியாவதால், அன்றைய தினம் வெளியாகும் ஸ்பைடர் படத்தில் தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபு நடித்திருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை திரையிட தயக்கம் காட்டி வருகிறார்களாம். இதனால் அதிர்ச்சியான, இப்படத்தின் தமிழ் பதிப்பை தயாரித்துள்ள லைகா நிறுவனம், தனது மீடியேட்டர்களை அழைத்து, தமிழகம் முழுவதும் குறைந்தது 200 தியேட்டர்கள் வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டதாம்.
லைகா நிறுவனத்தின் உத்தரவுக்கு இனங்க, தியேட்டர்களை பிடிக்க மீடியேட்டர்கள் தீவிரம் காட்டினாலும், தமிழகத்தில் ஸ்பைடர் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், டப்பிங் படம் என்ற பிம்பத்தை தான் ஏற்படுத்தும் என்று சில சினிமா வியாபாரிகள் கணித்துள்ளனர்.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...