தமிழ் சினிமாவில் ஹீரோயின், வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களுக்கும் கச்சிதமாக பொருந்தும் நடிகைகளில் முக்கியமானவர் வரலட்சுமி சரத்குமார்.
நடிகர் விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே காதல் என்று பல வருடங்கள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இருவரும் ஒன்றாக சேர்ந்து சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டார்கள். ஆனால், விஷாலுக்கு கடந்த வருடம் வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதால், வரலட்சுமியுடன் காதல் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வரலட்சுமிக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தீப் என்ற அவரது குடும்ப நண்பரை தான் வரலட்சுமி திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்தீப் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பதவி வகிக்கிறாராம். சச்சின், டோனி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு மிக நெருக்கமானவரும் கூடவாம்.
சந்தீப்பின் குடும்பத்திற்கும், வரலட்சுமியின் குடும்பத்திற்கும் பல ஆண்டுகள் பழக்கம் இருக்கிறதாம். அதனால், வரலட்சுமியும் சந்திப்பும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி, பிறகு காதலர்களாகி தற்போது மணவாழ்க்கையில் இணைய இருக்கிறார்கள்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...