Latest News :

உதவி இயக்குநர்களின் பசியை போக்கும் தயாரிப்பாளர் பெப்சி சிவா!
Tuesday May-19 2020

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலர் பல்வேறு உதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பெப்ஸி அமைப்பின் முன்னாள் செயலாளரான பெப்ஸி சிவா, சத்தமே இல்லாமல், கடந்த 40 நாட்களுக்கு மேலாக உதவி மற்றும் இணை இயக்குநர்களின் பசியை போக்கி வருகிறார்.

 

உதவி என்று வருபவர்களுக்கு இல்லை, என்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவியை உடனடியாக செய்யும் சினிமா பிரபலங்களில் பெப்ஸி சிவா முக்கியமானவர். அந்த வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா கலைஞர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் பெப்ஸி சிவா, உதவி மற்றும் இணை இயக்குநர்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் 300 பேருக்கு என்று சுமார் 40 நாட்களுக்கு மேலாக உணவு வழங்கி வருகிறார்.

 

சென்னை, வடபழனி, சாலிக்கிராமம், கே.கே.நகர், நெசப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு சென்று, அங்கிருக்கும் உதவி இயக்குநர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருவதோடு, பலருக்கு மொபைல் ரீசார்ஜ் மற்றும் பண உதவிகளையும் செய்து வருபவர், கோரோனா ஊரடங்கு அறிவித்த சில நாட்களிலேயே, சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவும் வகையில், ரூ 1,37,000 மதிப்புடைய அத்தியாவசிய மளிகை பொருட்களை சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு வழங்கினார்.

 

FEFSI Siva

 

சத்தமில்லாமல் இத்தகைய உதவியை செய்து வரும் பெப்சி சிவாவிடம் இது பற்றி கேட்டதற்கு, “எப்போதுமே உதவி, இணை, துணை இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள்  பண உதவியை கடனாக மட்டுமே கேட்பது உண்டு. ஏனெனில் அவர்கள் எப்படியாவது சினிமாவில் ஜெயித்து விடுவோம் என்றும், அதன் பிறகு பெற்ற கடனை திருப்பி கொடுப்போம் என்று முழுமையாக நம்புபவர்கள். அவர்களின் எண்ண ஓட்டத்தை நான் நன்கு அறிந்தவன். 

 

காரணம் நானும் அடிப்படையில் ஒரு உதவி இயக்குநராக தான் என் வாழ்வை தொடங்கியவன். இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நானும், ராஜா கார்த்திக்கும் பேசினோம். அப்படிபட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் தான் இதை செய்து வருகின்றோம். உங்களுக்கு நம்பிக்கை அளித்து, தேவையான உதவிகளை செய்ய நான் தயாராக இருக்கின்றேன். கட்டுப்பாடுகளையும், சில பிரச்சனைகளையும் தாண்டி தான் இந்த உதவியை தொடர்ந்து செய்து வருகின்றோம். தொடர்ந்து செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இது சாத்தியமாவதற்கு என்னோடு துணை நின்று உதவும் அன்பு உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக ராஜா கார்த்திக், பாக்யராஜ், வேல்முருகன், அசோக்குமார், ரமணி, பார்த்தசாரதி, வேணுகோபால் மற்றும் பலருக்கு நன்றி. இத்தகைய உதவிகளை களத்திற்கு சென்று செய்து வருபவர்களுக்காகவே இந்த பதிவு. நான் எனது குடும்பத்திற்கு செய்யும் உதவியாகவே இதனை பார்க்கிறேன். நான் உங்களோடு ஒருவனாக இருப்பது மன நிறைவைத் தருகின்றது.” என்று தெரிவித்தார்.

 

FEFSI Siva

 

அறிமுக இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில், இளையராஜாவின் இசையில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்தை எஸ்.என்.எஸ் மூவிஸ் நிருவனம் சார்பில் பெப்ஸி சிவாவின் மனைவி கெளசல்யா சிவா தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6584

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery