நடிகர் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம் ‘பில்லா’. 1980 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு ரஜினியை தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும் உயர்த்தியது. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீப்ரியா நடித்திருப்பார்.
ஆனால், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவை தான் அணுகினார்களாம். ஆனால், அப்போது அவர் நடிக்க மறுத்திருக்கிறார், என்பது ஜெயலலிதாவே, தனது கைப்பட பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதா அரசியலில் ஈடுபட்ட போது சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சமயத்தில், அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் தான், அவர் அரசியலில் ஈடுபடுகிறார், என்று பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து ஜெயலலிதா, அந்த பத்திரிகை ஆசிரியருக்கு கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், ”தனக்கு வாய்ப்பு குறைந்ததால் தான் அரசியலில் ஈடுபடுவதாக செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள். ஆனால், அது உண்மை அல்ல. நடித்தது போதும் என்று நான் முடிவு செய்துவிட்டேன். அதனால் தான் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டே. பில்லா படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் என்னை தான் அனுகினார்கள். சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்றிருக்கும் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு என்னை ஹீரோயினாக நடிக்க அணுகிய போதும் அதை நான் மறுத்துவிட்டேன். காரணம் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் எனக்கு குறைந்துவிட்டது. மற்றபடி எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இல்லை.” என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும் அந்த கடிதம் இதோ,

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...