தமிழ் சினிமாவின் வெற்றி கதாநாயகியாக வலம் வந்த லட்சுமி மேனன் நடிப்பில் கடைசியாக ’றெக்க’ படம் வெளியானது. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்குப் பிறகு பிரபு தேவாவுடன், ‘யங் மங் சங்’ மற்றும் ‘சிப்பாய்’ ஆகிய படங்களில் நடிக்க தொடங்கிய லட்சுமி மேனனுக்கு, அதன் பிறகு வேறு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. மேலும், அவர் நடித்துக் கொண்டிருந்த இரண்டு படங்களும் சில பிரச்சினைகளால் ரீலீஸ் ஆக முடியாமல் உள்ளது.
பட வாய்ப்புகள் இல்லாததால் நடனப் பள்ளி ஒன்றை ஆரம்பித்த லட்சுமி மேனனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இதை மறுத்த லட்சுமி மேனன், தான் படிப்பில் கவனம் செலுத்தி வருவதாக விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, இயக்குநர் முத்தையா இயக்கும் ஒரு படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். கெளதம் கார்த்திக் நடிக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காத நிலையில், மேலும் ஒரு புதிய தமிழ்ப் படத்திலும் லட்சுமி மேனன் ஹீரோயினாக ஒப்பந்தமாக, மீண்டும் தமிழ் சினிமாவில் தான் விட்ட இடத்தை பிடிப்பதற்கான முயற்சியில் தற்போது அவர் களம் இறங்கியிருக்கிறாராம்.
லட்சுமி மேனன் ஹோம்லியான வேடங்களில் மட்டுமே நடிப்பார், அப்படிப்பட்ட கதாப்பாத்திரங்கள் மட்டுமே அவருக்கு பொருந்தும், என்ற இமேஜை உடைக்க நினைக்கும் லட்சுமி மேனன், தற்போது தன்னை மாடல் கேர்ளாக் மாற்றி வருகிறாராம்.
இந்த நிலையில், நடிகைகள் பலர் டாட்டூ குத்துவது போல லட்சுமி மேனனும் தனது முதுகில் பெரிய டாட்டூ ஒன்றை குத்தியிருப்பதோடு, அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும், தனது முடிக்கு கலர் போட்டு, தன் உருவத்தையும் சற்று மாற்ற முயற்சித்திருக்கிறார்.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ,

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...