‘ரேணிகுண்டா’, ‘18 வயசு’ மற்றும் ‘கருப்பன்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் பன்னீர் செல்வம், தற்போது ‘நாந்தான் சிவா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தக்கட்ட வேலைகள் தொடங்கியுள்ளன.
அறிமுக நடிகர் வினோத் ஹீரோவாக நடிக்க, அஷ்ரிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கும் இப்படம் குறித்து இயக்குநர் பன்னிர் செல்வம் கூறுகையில், “ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரை சந்திக்கின்றான். அந்த இருவரும் அவனின் வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை. இதை காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் மூலம் கூறியிருக்கிறோம். இதன் படபிடிப்பு கும்பகோணம், திருச்சி பகுதிகளில் நடந்தது. படபிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இன்று இதன் பாடல் வெளியீடு சோனி ஆன்லைனில் வெளியாகிறது.
கதாநாயகனாக புதுமுகம் வினோத் நடிக்க, கதாநாயகியாக 'உதயம் NH4' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அர்ஷிதா ஷெட்டி நடிக்கிறார். பிரசாந்த் நாராயண், அழகம் பெருமாள், சுஜாதா, விசாலினி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.” என்றார்.
பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய ராஜசேகர் ஆக்ஷன் காட்சிகளை வடிமைக்கிறார். தினேஷ் நடனம் அமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுத, சீனு கலையை நிர்மாணிக்கிறார்.
‘பையா’, ‘அஞ்சான்’, ‘ரஜினி முருகன்’, ‘மன்சப்பை’, ‘வழக்கு எண் 18/9’, ‘தீபாவளி’, ‘கும்கி’, ‘உத்தமவில்லன்’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த இயக்குநர் என்.லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் என்.சுபாஷ்சந்திரபோஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...