‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான தெலுங்கு நடிகர் ராணா, விரைவில் ஹாலிவுட்டிலும் எண்ட்ரியாகப் போகிறார்.
ராணா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நானே ராஜா நானே மந்திரி’ என்ற தெலுங்குப்படம், தமிழில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற பெயரில் இம்மாதம் வெளியாகிறது. அரசியல் நையாண்டி கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்குப் பிறகு ஹாலிவுட் படம் ஒன்றில் ராணா நடிக்கிறார்.
கடந்த 1888 ஆம் ஆண்டு 700 பயணிகளுடன் காணாமல் போன விஜில் என்ற கப்பலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ராணா விஞ்ஞானி வேடத்தில் நடிக்கிறார். அவருடன் பல முன்னணி ஹாலிவுட் நடிகர் நடிகைகள் நடித்தாலும், ராணாவின் வேடம் தான் மிக முக்கியம் வாய்ந்ததாம்.
டுவானில் மேத்த என்ற ஹாலிவுட் இயக்குநர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.
ஏற்கனவே, நீர் மூழ்கி கப்பலை மையமாக வைத்து உருவான ’காஸி’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...