படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தினால் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்கு தடை ஏற்பட்ட நிலையில், தற்போதைய கொரோனா பிரச்சினையால் மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதே தெரியவில்லை. இதற்கிடையில், கமல்ஹாசன் இரண்டு வருடங்களுக்கு தொடங்கி பிறகு கிடப்பில் போடப்பட்ட ‘தலைவன் இருகின்றான்’ படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்து திரைப்பட படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படும் போது, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை தொடங்கி விரைவாக முடித்துவிட திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், பிறகு ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் படபிடிப்பை தொடங்க இருக்கிறாராம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்து இயக்கும் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதோடு, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதேபோல் வடிவேலும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் மூன்று கதாநாயகிகள் கதாப்பாத்திரம் இருப்பதாகவும், அதில், ரேவதி, ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படி ‘தலைவன் இருக்கின்றான்’ படம் குறித்து அவ்வபோது சில தகவல்கள் வெளியானாலும், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...