இந்திய அரசியல் தலைவர்களில் முக்கியமானவரும், பெண் அரசியல்வாதிகளில் வலிமை மிக்கவர் என்றும் வர்ணிக்கப்படுபவர் ஜெயலலிதா. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர், தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய இடத்தையும் பிடித்தார்.
தற்போது ஜெயலலிதா உயிருடன் இல்லை என்றாலும், சினிமா மற்றும் அரசியலில் அவர் செய்த சாதனைகள் மக்களிடம் உயிர்ப்புடன் இருக்கின்றது. மேலும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக பலர் எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிஷோர், தான் வளர்க்கும் மாடு ஒன்றுக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்துள்ளார்.
சினிமா நடிகர் என்றாலும் மிக இயல்பாக இருக்கும் கிஷோர், கர்நாடக மாநிலத்தில் விவசாய நிலம் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் தனது மனைவியோடு சேர்ந்து இயற்கை விவசாயம் செய்வதோடு, அங்கே நாட்டு மாடுகள் சிலவற்றையும் வளர்க்கிறார்.

அந்த மாடுகளில் ஒன்றின் பெயர் தான் ஜெயலலிதா. மாட்டுக்கு ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பெயரை வைத்தது ஏன்? என்று கிஷோரிடம் கேட்டதற்கு, “ஜெயலலிதா அம்மா இறந்த போது பிறந்த மாடு அது. அதனால் தான் அந்த மாட்டுக்கு அவர்கள் நினைவாக ஜெயலலிதா என்று பெயர் வைத்தோம். அதேபோல், கபாலி திரைப்படம் ரிலீஸின் போது பிறந்த மற்றொரு மாடுக்கு கபாலி என்றும் பெயர் வைத்திருக்கிறோம். இந்த மாடுகளை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம்.” என்று தெரிவித்தார்.
தற்போது தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தோடு தங்கியிருக்கும் கிஷோர், அங்கு கோழி மற்றும் வான்கோழி வளர்ப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளாராம்.

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...