விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தை எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இப்படம், கொரோனா பிரச்சினை காரணமாக ரிலீஸ் தாமதமாகி வருகிறது.
இதற்கிடையே, மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் பரவி வர, தற்போது “குட்டி ஸ்டோரி” பாடலுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதோடு, தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பொது மக்களும், பிரபலங்களும் “வாத்தி கம்மி” பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார்கள்.
இந்த நிலையில், டிக் டாக்கில் வெளிநாட்டு பெண் ஒருவர் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ,
#விஜயின் #குட்டிஸ்டோரி பாடலை பாடும் வெளிநாட்டுப் பெண்#Master #KuttyStory @VijayFansTrends @VijayFansUpdate @VijayFansPage @VijayFansClub @vijayfc @vijayfansclub4 pic.twitter.com/GrRxpWsUN9
— CinemaInbox (@CinemaInbox) May 22, 2020
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...