விஷாலின் ‘துப்பறிவாளன்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, நல்ல வசூலையும் ஈட்டு வருவதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதையடுத்து ‘துப்பறிவாளன் 2’ மூலம் மீண்டும் மிஷ்கினுடன் தான் இணையப் போவதாக விஷால் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, ‘சண்டைக்கோழி 2’ படத்திற்காக சென்னை மீனம்பாக்கம் அருகே மதுரை போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பெப்ஸி அமைப்பின் வேலை நிறுத்தத்தினால் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் துப்பறிவாளன் புரோமோஷன் வேலைகளில் விஷால் பிஸியானதால் சண்டைக்கோழி 2 படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது அனைத்து பணிகளையும் விஷால் முடித்துவிட்டதாலும், பெப்ஸி அமைப்பின் வேலை நிறுத்தம் தீர்வுக்கு வந்ததை தொடர்ந்து, இன்று சண்டைக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சண்டைக்கோழி படத்தில் ஹீரோயினாக நடித்த மீரா ஜாஸ்மீன், ராஜ்கீரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் படத்தின் நெடிகட்டிவான கதாபாத்திரம் ஒன்றில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாழ்க்கையில் விஷாலின் காதலியான வரலட்சுமி சரத்குமார், சினிமாவில் அவரது நாயகியாக அல்லாமல் வில்லியாக நடித்தாலும், அவரது இந்த நெகட்டிவ் வேடம் அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இப்படத்தை சொல்லும் என்று விஷால் அண்ட் வரலட்சுமி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...