Latest News :

சினிமாவே வேண்டாம், ஆள விடுங்க...! - அலறும் அறிமுக நடிகை
Saturday May-23 2020

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளியாகவும் இருப்பவர்கள் அங்கிருந்து தாவி சீர்யல் நடிகையாகி பிறகு வெள்ளித்திரை வாய்ப்பு பெறுவதற்கு பல்வேறு வகையில் முயற்சி செய்து வரும் நிலையில், ஒரு நடிகை வித்தியாசமாக திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு அங்கிருந்து செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளினி என்று இறங்கி தற்போது சீரியல் நடிகையாக பிரபலமாகியிருக்கிறார்.

 

இப்படி எதிமறையான அந்த நடிகைக்கு தற்போதும் சினிமா வாய்ப்புகள் பல வந்தாலும், “சினிமா வேண்டவே வேண்டாம், ஆள விடுங்க...” என்று அலறி ஓடுகிறாராம்.

 

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா தொரடி சுந்தர். அப்படத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்த இவர், பல தமிழ் தொலைக்காட்சிகளிலும், தெலுங்கு தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியதோடு, செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தார். பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கியவர் மக்களிடம் பிரபலமானார்.

 

Aayiram Muthanglaudan Thenmozhi

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமான சரண்யாவுக்கு தற்போதும் ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் வந்தாலும், அவர் அனைத்தையும் நிராகரித்து வர, இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்ட போது, “சினிமா எனக்கு செட் ஆகாது என்று தோன்றுகிறது. சினிமா மூலம் கிடைக்கும் பணமும், புகழும் என்னை பயமுறுத்துகிறது. கதை கேட்பது, புது புது குழுவுடன் பணிபுரிவது, போன்ற விஷயங்கள் எனக்கு செட் ஆகாது. அதனால் எனக்கு இதுவே போதும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Actress Saranya Taurudi

 

சினிமாவில் நடிப்பதை தவிர்க்கும் சரண்யா, அதற்கான காரணமாக இப்படி சொல்லியிருந்தாலும், அவர் தனது முதல் படத்தின் மூலம் சில கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டிருக்க கூடும், அதனால் தான் சினிமா வேண்டாம் என்று கூறுகிறார், என்றும் சீரியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Related News

6601

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery