நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை!
Saturday May-23 2020

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவருக்கு வயது 36.

 

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இன்றி என்று பல மொழிகளில் நடித்திருக்கும் வாணிஸ்ரீ, பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரது மகன் அபிநயா வெங்கடேஷ். 36 வயதாகும் இவர் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

 

இந்த நிலையில், சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த அபிநயா வெங்கடேஷ்,  அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

அதே சமயம், அபிநயா வெங்கடேஷ் நெஞ்சுவலி காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்ததாகவும் சிலர் கூறுவதால், அவரது மரணத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


Related News

6603

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery