கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் சுமார் 60 நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், சீரியல்களின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும், என்று சீரியல் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
அதேபோல், திரைப்பட தயாரிப்பாளர்களும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும், என்றும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இவர்களின் சீரியல் படப்பிடிப்புக்கு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. 20 பேர்களுடன், படப்பிடிப்பு தளம் அல்லது வீடுகளில் படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என்றும், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது, என்றும் கூறப்பட்டது.
அரசின் இந்த அனுமதியால் சீரியல் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், சில சீரியல் தயாரிப்பாளர்கள் அனுமதி கிடைக்கும் சோகமாகவே இருக்கிறார்கள். காரணம், அவர்களால் உடனே படப்பிடிப்பு தொடங்க முடியாத அளவுக்கு புதிய சிக்கலில் சிக்கியுள்ளார்கள்.
அதாவது, பெரும்பாலான தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் ஐதராபாத் அல்லது பெங்களூர் நகரை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்களாம். படப்பிடிப்பின் போது மட்டும் சென்னைக்கு வருகிறவர்கள், படப்பிடிப்பு முடிந்ததும் தங்களது இறுப்பிடமான வெளிமாநிலங்களுக்கு சென்றுவிடுகிறார்களாம்.
மற்ற நேரங்களில் இது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், தற்போதைய கொரோனா காலத்தில், வெளிமாநிலத்தில் இருந்து ஒருவர் தமிழகம் வருகிறார் என்றால், அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அதே சமயம், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர், மீண்டும் அவர்களின் இருப்பிடத்திற்கு செல்லும் போது அங்கேயும் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும், என்ற நிலை இருப்பதால், சீரியல்களின் ஹீரோ மற்றும் ஹீரோக்கள் தற்போது நடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாம்.
இதனால், வெளிமாநில நடிகர், நடிகைகளை தங்களது சீரியல்களில் நடிக்க வைத்த தயாரிப்பாளர்கள் தொடர்ந்து எப்படி படப்பிடிப்பு நடத்துவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம். அதே சமயம், சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி படப்பிடிப்பை விரைவில் தொடங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க, கதையை மாற்றலாமா என்றும் சிலர் யோசித்து வருகிறார்களாம்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...