வாணிஸ்ரீயின் மகன் தற்கொலைக்கு காரணம் இதுவா?
Sunday May-24 2020

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் ஒரே மகன் அபிநய வெங்கடேஷ் கார்த்திக், நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். 36 வயதாகும் அபிநய வெங்கடேஷ் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவர் நெஞ்சுவலி காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக முதலில் கூறப்பட்டது.

 

பிறகு, அவர் சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டில் உள்ள தனது பண்ணை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வெளியானது. மேலும், ஊரடங்கு காரணமாக மன தனது பண்ணை வீட்டில் இருந்த அபிநய வெங்கடேஷ் மன அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில், அபிநய வெங்கடேஷ் சொத்து பிரச்சினையில் தான் தற்கொலை செய்துக் கொண்டார், என்ற தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், அபிநய வெங்கடேஷின் தற்கொலைக்கான காரணம் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமான காரணம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6606

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery