தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் சிலர், வேறு சில தொழில்களில் ஈடுபடுவது வழக்கம் தான். குறிப்பாக கட்டுமான தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் பலர் ஈடுபடுகிறார்கள். இதில், சிலர் நேரடியாகவும், சிலர் மறைமுகமாகவும் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில், நடிக்க வருவதற்கு முன்பே பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகருக்கு ரியல் எஸ்டேட் தொழில் முக்கியமானதாகும்.
அந்த வகையில், தனது ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பலரின் ”சொந்த வீடு” கனவை நினைவாக்கியிருக்கும் நடிகர் துரை சுதாகர், ‘களவாணி’ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டு பெற்றதை தொடர்ந்து பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தனது ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் செலுத்த உள்ளார்.
இதற்காக ‘லேண்ட் லார்ட் மேக்கர்ஸ்’ (Land Lord Makers) என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கும் நடிகர் துரை சுதாகர், ”பணம் இல்லாத ஏழை இருந்தாலும், நிலம் இல்லாத ஏழை இருக்கக்கூடாது” என்ற கொள்கையை தனது நிறுவனத்தின் தாரகமந்திரமாகக் கொண்டு, ”அனைவருக்கும் சொந்த நிலம்” என்ற அடிப்படையில் மலிவான விலையில் நிலங்களை விற்பனை செய்யும் பணியில் விரைவில் ஈடுபட உள்ளார்.

கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த உடன், தஞ்சை மாவட்டத்தில் முதலில் தனது திட்டத்தை தொடங்க இருக்கும் நடிகர் துரை சுதாகர், படிபடியாக தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...