தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும், அதிக படங்களில் நடிக்கும் ஹீரோக்களில் ஒருவருமான ஜி.வி.பிரகாஷ்குமாரின் தங்கை பவானிஸ்ரீ, திரைப்படங்களில் நடிக்க பல ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறார். அதற்கான தனது புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார்.
பவானிஸ்ரீயின் புகைப்படங்களை பார்த்து அவரை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அணுகினாலும், சரியான கதை அமையாததால் பவானிஸ்ரீயின் நடிப்பு கனவு, கனவாகவே இருந்த நிலையில், முன்னணி நடிகர் ஒருவர் அவரது கனவை நினைவாக்கியிருக்கிறார்.
ஆம், விஜய் சேதுபதியின் படத்தில் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘க/பெ ரணசிங்கம்’ கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வைரலான நிலையில், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீயும் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறாராம். அவரது சில காட்சிகளும் டீசரில் இடம்பெற்றிருக்கிறது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...