Latest News :

கார்ப்பரேட் நிறுவனத்துடன் கைகோர்த்த அஜித் - கலக்கத்தில் கோடம்பாக்கம்!
Wednesday September-20 2017

விவேகம் படம் குறைகள் குறித்து என்னதான் சத்தமாக விமர்சகர்கள் பேசினாலும், காதில் பச்சி வைத்தது போலவே படக்குழுவினர் அனைவரும் மவுனம் காத்து வர, அஜித் ரசிகர்களோ படத்தின் சாதனைகளை பறிசாற்றிக் கொண்டாடுவதை மட்டும் நிறுத்திய பாடில்லை.

 

விவேகம் தோல்வி படம் என்று கலைமகள் வந்து சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ள தயாராக இல்லாத அஜித் ரசிகர்கள், அஜித் - சிவா கூட்டணி மீண்டும் இணையப்போகிறது, என்ற செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் உரைந்து போவதுடன், “ஆண்டவா அஜித்துக்கு நல்ல புத்திய கொடு...” என்று நின்ற இடத்திலே தங்களது குல தெய்வங்களை வேண்டவும் செய்கிறார்கள்.

 

ரசிகர்களையே வேண்டாம் என்று விரட்டியடித்த அஜித், அவர்களது எண்ணத்தையும் உதாசினப்படுத்திவிட்டு தனது அடுத்த படத்தையும் சிவாவுக்கே கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே சமயம், மீண்டும் அஜித் -  சிவா கூட்டணிக்கு ரசிகர்கள் மட்டும் அல்ல கோடம்பாக்க தயாரிப்பாளர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்த அஜித், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

 

ஒற்றை எழுத்து ஆங்கில சேனல் ஒன்று, பிரபல நடிகையின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான ஒருவருடன் இணைந்த் தமிழில் ஏகப்பட்ட படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம். ஆரம்பமே அஜித் மூலமாக இருக்க வேண்டும் என்று அந்நிறுவனம் விரும்ப, அனைத்தையும் யோசித்த அஜித், அந்த நிறுவனத்திற்கு ஒகே சொல்லிவிட்டாராம்.

 

அதே சமயம், அஜித்தின் இந்த முடிவால் பண பலம் அதிகம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனம் தமிழ் சினிமாவில் காலூன்ற இருப்பது கோடம்பாக்க தயாரிப்பாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News

661

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery