கடந்த மூன்று ஆண்டுகளாக ஜூன் மாதம் என்றாலே அது பிக் மாதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் பிக் பாஸ் ரசிகர்களை கொரோனா பிரச்சினை மிகவும் ஏமாற்றமடைய செய்திருக்கிறது. இந்த ஏமாற்றம் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிக் பாஸ் போட்டிக்காக காத்திருந்த பிரபலங்கள் மற்றும் அந்த நிகழ்ச்சியை நடத்தும் குழுவினருக்கும் தான்.
கடந்த மூன்று சீசன்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது சீசன் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதால், நான்காவது சீசனை மிகப்பெரிய அளவில் நடத்த பிக் பாஸ் குழு முடிவு செய்திருந்தது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை கடந்த ஆண்டே தொடங்கினாலும், தற்போதைய கொரோனா பிரச்சினையால் இந்த ஆண்டு பிக் பாஸ் நடக்குமா? என்பது பெரிய கேள்விக்குரியாவே உள்ளது.
தற்போது தொலைக்காட்சி தொடர்களுக்கு அரசு அனுமதி அளித்தாலும் ஒரே வீட்டுக்குள் சுமார் 14 பேர்களை கொண்டு நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அது சாத்தியம் இல்லை, என்பதால் சம்மந்தப்பட்ட சேனல் என்ன செய்வது என்று யோசித்து வருகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் மூன்றாவது சீசனின் முக்கிய போட்டியாளரான வனிதா, பிக் பாஸின் 4-ம் சீசன் பற்றிய சீக்ரெட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது, தற்போது விஜய் தொலைக்காட்சி ’லக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கிறார்களாம். அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பை தற்போது எப்படி நடத்துவது என்பது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பவர்கள், அதன் நடுவர்களில் ஒருவரான வனிதாவிடம் சில யோசனைகளை கேட்டிருக்கிறார்களாம்.
அதே சமயம், பிக் பாஸ் சீசன் 4 குறித்து விஜய் டிவி இன்னும் முடிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருக்கும் வனிதா, இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி நடப்பது சந்தேகம் என்றும், அப்படி நடந்தால் அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பலர் போட்டியாளராக செல்ல வாய்ப்பு உண்டு, என்றும் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...