குழந்தை நட்சத்திரம் டூ கதாநாயகி! - வைரலாகும் குஷ்பூவின் அரிய புகைப்படம்
Monday May-25 2020

தமிழ் சினிமா வரலாற்றில் நடிகை ஒருவருக்கு ரசிகர்களுக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அது குஷ்புவுக்கு தான். தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலேயே தனக்கு என்று தனி இடத்தை பிடித்த குஷ்பு, சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து இந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், அங்கேயே கதநாயகியாகவும் அறிமுகமானவர், 1986 ஆம் ஆண்டு ‘கலியுக பாண்டவலு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர்,  1988 ஆம் ஆண்டு வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதையடுத்து தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர், ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ், கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

 

Actress Kushboo

 

சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே இயக்குநர் சுந்தர்.சி-யை திருமணம் செய்துக் கொண்ட குஷ்பு, திருமணத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிப்பதோடு, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

இதற்கிடையே, அரசியலில் நுழைந்த குஷ்பு திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர் பிறகு அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருவதோடு, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

 

தற்போதைய கொரோனா காலத்திலும் சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்குவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் குஷ்பு, கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருந்தாலும், சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.

 

Kushboo

 

அந்த வகையில், 1980 ஆம் ஆண்டு சசி கபூர் நடித்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர், 4 வருடங்களில் ஜாக்கி ஷெராப்புக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த மாற்றம் மற்றும் வளர்ச்சியை நினைவு கூறும் வகையில், அக்காலத்தில் எடுத்த அரிய புகைப்படம் ஒன்றையும் குஷ்பு வெளியிட்டுள்ளார்.

 

அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இதோ,

 

 

Related News

6611

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery