தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்த சந்தானம், தற்போது ஹீரோவாக பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். ‘டிக்கிலோனா’ மற்றும் ‘பிஸ்கோத்’ ஆகிய படங்கள் சந்தானம் நடிப்பில் உருவாகி வருகிறது.
இதற்கிடையே சந்தானத்தின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’A1'. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தாரா அலிஷா பெர்ரி.

2011 ஆம் ஆண்டு வெளியான ‘100 % லவ்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தாரா அலிஷா பெர்ரி, தொடர்ந்து பல தெலுங்குப் படங்களில் நடித்ததோடு, 2014 ஆம் ஆண்டு வெளியான ‘மஸ்த்ராம்’ என்ற படம் மூலம் இந்தி சினிமாவிலும் அறிமுகமானார்.

இதையடுத்து இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர், சந்தானம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, அவருக்கு இரண்டாவது தமிழ்ப் பட வாய்ப்பையும் சந்தானமே வழங்கியிருக்கிறார். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘பிஸ்கோத்’ படத்தில் தாரா அலிஷா பெர்ரி தான் கதாநாயகி. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் பாதியில் நிற்கிறது.
இந்த நிலையில், தாரா அலிஷா பெர்ரி நடித்த இந்தி திரைப்படம் ‘மஸ்த்ராம்’ தற்போது வெப் சீரிஸாக வெளியாகியுள்ளது. சிறந்த நாவல்களை எழுத நினைக்கும் ஒரு எழுத்தாளர் பொருளாதார பாதிப்பால் ஆபாச கதை புத்தகம் எழுதும் கதையாசிரியராக மாறுகிறார். அப்படி அவர் எழுதும் ஆபாச கதைகள் தான் இப்படத்தின் கதை. சுமார் 5 கதாநாயகிகள் இடம்பெறும் இந்த வெப் சீரிஸ் படு ஆபாசமாக உள்ளது.

இந்த வெப் சீரிஸில் தாரா அலிஷா பெர்ரியும் ஒரு கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவர் மற்ற கதாநாயகிகள் போல மிக ஆபாசமாக நடிக்கவில்லை என்றாலும், லிப் லாக் முத்தக்காட்சிகள் என கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்.

இவரை தவிர மற்ற கதாநாயகிகள் அனைவரும் கவர்ச்சியின் எல்லையை தாண்டியிருப்பதால், இந்த வெப் சீரிஸ் வட மாநிலத்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...