முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றிய மணிமேகலை தமிழக மக்களிடம் பிரபலமானவர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், பிரபலமாக இருக்கும் டிவி தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்கிறார். இதற்கிடையே ஹுசைன் என்ற நடன கலைஞரை மணிமேகலை காதலித்து திருமணம் செய்ததும், அந்த திருமணத்திற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததும், பல ஊடகங்களில் செய்தியாக வந்ததோடு, மணிமேகலை - ஹுசைன் தம்பதியின் பேட்டியும் வைரலானது.
திருமணத்திற்குப் பிறகு தனி குடித்தனம் போயுள்ள ஹுசைன் - மணிமேகலை தம்பதி, தங்களது வீட்டில் அடிக்கும் லூட்டிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதை வைரலாக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட கிராமம் ஒன்றில் சுமார் 60 நாட்கள் தங்கியிருந்த மணிமேகலை அங்கு முறுக்கு சுடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டதை தனது சமுக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த நிலையில், இன்று தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டதை தொடர்ந்து, தனது கணவருக்கு ரம்ஜான் வாழ்த்து கூறிய மணிமேகலை முஸ்லீம் பெண்கள் உடை அணிந்துக் கொண்டு தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டீர்களா? என்று மணிமேகலையை கேட்க, அவரோ “பொங்கல் என்றால் கோவிலுக்கு செல்வோம், ரம்ஜானும் கொண்டாடுவோம்” என்று கூலாக பதில் அளித்துள்ளார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...