தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உள்ள யோகி பாபு, கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் கதையின் நாயகனாக நடித்த ‘கூர்கா’, ‘தர்மபிரபு’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து மேலும் சில படங்களில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்தில் யோகி பாபு ஹீரோவாக ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் என்பவர் இயக்க இருக்கிறார்.
நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களை தயாரித்திருக்கும் பா.இரஞ்சித் தயாரிக்கும் மூன்றாவது படமான இப்படம் குழந்தைகளுக்கான படமாக உருவாக உள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...