கொரோனா வைரஸ் பிரச்சினை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் திரை நட்சத்திரங்களின் இறப்பும் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களான இர்பான் கான், ரிஷி கபூர், மலையால சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குநருமான விசு, இளம் நடிகர் சேதுராமன் என திரையுல பிரபலங்களின் தொடர் மரணங்களினால் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில், பாலிவுட் சினிமாவின் பிரபல இளம் நடிகரான மோகித் பஹேல் என்பவரின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சல்மான்கான், அசின் நடித்திருக்கும் ‘ரெடி’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மோகித் பஹேல், பல பாலிவுட் படங்களில் நடித்திருப்பவர், மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த மோகித் பஹேல், ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊரான மதுராவுக்கு சென்றவர், அங்கு திடீரென்று மரணம் அடைந்துள்ளார்.

மோகித் பஹேலின் மரணத்திற்கு பாலிவுட் நடிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருடன் நடித்த நடிகை பிரனீத் சோப்ரா, ”மோகித் திறமையானவர், இனிமையானவர், எப்போதும் உற்சாகத்துடனும், நேர்மறை எண்ணங்களுடனும் இருப்பார். அவரின் மரணம் வருத்தத்தை தந்துள்ளது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
One of the nicesttt people to work with! Happy, positive and motivated always. Love you Mohit. RIP🤎 #JabariyaJodi https://t.co/b0Gr6GpCxg
— Parineeti Chopra (@ParineetiChopra) May 23, 2020
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...