தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளிகளில் முக்கியமானவராக திகழ்பவர் ரம்யா. சினிமா நட்சத்திரங்களுடன் நெருக்கமாக பழகும் இவர், தற்போது நடிக்கவும் தொடங்கியிருக்கிறார். மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’, ‘ஆடை’, ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் விஜயின் ‘மாஸ்டர்’ படத்திலும் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
’மாஸ்டர்’ படத்தை பெரிதும் எதிர்ப்பார்த்திருக்கும் ரம்யா, சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ‘சங்கத்தலைவன்’ படத்திலும் நடித்திருக்கிறார். இவ்விரு படங்கள் ரிலீஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கு தனி இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ரம்யா, பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.
தற்போதைய கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் பேசி வந்த ரம்யா, திடீரென்று சமூக வளைதளத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். ரம்யாவின் இந்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து ரம்யா வெளியிட்டுள்ள பதிவில், ”இந்த ஊரடங்கின் கடைசி வாரத்தை மெதுவாக எடுத்துக்கொள்ளப் போகிறேன். உயிரோடு இருப்பதற்காக என் இதயமும் மனமும் பாராட்டை விரும்புகின்றன. இருக்கும் அனைத்துக்காகவும் நன்றி செலுத்தி ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக வாழுங்கள். கவலை வேண்டாம். நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன். ஒரு குட்டி இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன் என் அன்பு மக்களே. அதுவரை உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜே ரம்யா, இப்படி சமூக வலைதளத்தில் இருந்து திடீரென்று விலகுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...