விஜய் தொலைக்காட்சியின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் மூலம் பிரபலமான சரண்யா தொரடி சுந்தருக்கு சினிமா வாய்ப்புகள் பல வந்தாலும், அவர் அனைத்தையும் நிராகரித்துவிட்டு சீரியலே போதும், என்று கூறுகிறார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சரணயா, சினிமா மூலம் கிடைக்கும் பணமும், புகழும் பயத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் சினிமாவை நிராகரிக்கிறேன், என்று தெரிவித்திருந்தார்.
சரண்யாவின் இந்த பதில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே சமயம், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’ என்ற படத்தில் நாயகியாக நடித்த சரண்யா, அதன் பிறகே சீரியலில் பிரபலமானார். சினிமாவில் அறிமுகமாகி பிறகு சீரியலுக்கு வந்தவர், தற்போது சினிமாவே வேண்டாம், என்று கூறுவதற்கு, அவர் சொல்லும் காரணம் மட்டும் உண்மையில்லையாம். வேறு ஒரு காரணமும் இருக்கிறதாம்.
அதாவது சீரியல் மூலம் பிரபலமாகியிருக்கும் சரண்யா, அதே சீரியல் உலகில் பல முன்னணி நடிகர்களுடன் நெருக்கமாக பழகுவதோடு, தொலைக்காட்சியில் உள்ள சில முக்கிய நபர்களுடன் நல்ல பழக்கத்தில் இருக்கிறாராம். அதாவது, அவர்களுடன் பப், பார்ட்டி என்று செல்லும் அளவுக்கு அவர்களுடன் அவருக்கு பழக்கம் இருக்கிறதாம். இனால், அவருக்கு டிவி-யில் வாய்ப்புகளுக்கும், வருமானத்திற்கும் பஞ்சமில்லை என்பதால், சினிமா வாய்ப்புகளை கண்டுக்கொள்வதில்லை, என்று அவரை தெரிந்தவர்கள் சிலர் கூறுகிறார்கள்.
ஆனால், தொலைக்காட்சியை விட சினிமா பெரிய மீடியம், அதில் அவர் வெற்றி பெற்றால் இதை விட பெரிய இடத்திற்கு போகலாம், இது தெரியாமல் அவர் டிவிக்காரங்களுடனே நேரத்தை வீணடிக்கிறார், என்ற பேச்சும் அடுபடுகிறது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...