கொரோனா ஊரடங்கு நிலவி வரும் இந்த சூழ்நிலையில் பல திரை நட்சத்திரங்கள் மரணம் அடைந்து வருவது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இம்ரன்கான், ரிஷி கபூர், விசு, சேதுராமன் என பல திரை நட்சத்திரங்கள் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் கூட இந்தி சீரியல் நடிகை ஒருவரும், நடிகர் ஒருவரும் படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரபல மாடல் அழகியும், கன்னட தொலைக்காட்சியின் பிரபல நடிகையுமான மெபினா மைக்கேல் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தேவி ஹள்ளியில் இருந்து கோரக்கில் உள்ள மடிகேரிக்கு மெபினா மைக்கேல் காரில் சென்றிருக்கிறார். அப்போது அவர் சென்ற கார், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில் மோதி ஏற்பட்ட விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
டிவி நடிகை மெபினா மைக்கேலின் மரணம் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...