தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினந்தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால், வரும் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கும், அல்லது மாநிலங்களை விட்டு மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதோடு, அவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும், என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, வெளியூர் செல்லும் பல திரை நட்சத்திரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பாரதிராஜா, ராதாரவி உள்ளிட்ட சிலர், சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சென்று அங்கு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், பிரபல நடிகை பாவனா, பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு சென்றதால், அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
ஆனால், உண்மையில் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. பெங்களூரில் தனது கணவருடன் வசித்து வரும் பாவனா, தனது சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூருக்கு சென்றபோது, அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை அவருக்கு எந்தவித அறிகுறையும் இல்லையாம். இருப்பினும், அவர் தானகாவே முன் வந்து 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக சுகாதார அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். பாவனாவின் இத்தகைய நடவடிக்கைக்கு கேரள சுகாதார அதிகாரிகளும் மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாவனா, தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர், இறுதியாக 2010 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘அசல்’ படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
கன்னட சினிமா நடிகரும், தயாரிப்பாளருமான நவீன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பாவனா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது ‘இன்ஸ்பெக்டர் விக்ரம்’, ‘பஜரங்கி 2’, ‘கோவிந்தா கோவிந்தா’ ஆகிய கன்னட படங்களில் பாவனா நடித்து வருகிறார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...