நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் ஃபெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நாளை (மே 29) ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.
சூர்யாவின் இந்த முயற்சிக்கு தமிழக திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அத்தனை எதிர்ப்புகளையும் கடந்த நடிகர் சூர்யா இப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடுவதோடு, இப்படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும், என்பதிலும் முனைப்புடன் இருக்கிறார். இதற்காக பல வகையில் படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரைலர், அத்தனை தமிழ் தொலைக்காட்சிகளிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிலையில், ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் டிரைலரை இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்திருப்பதோடு, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...