ஜோதிகா நடிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் நாளை ஒடிடி தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகிறது.
நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இப்படத்தில் ஜோதிகா முதல் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருப்பதோடு, பாக்யராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா, ”‘பொன்மகள் வந்தாள்’ சமூகத்தை கலங்கடிக்கும்” என்று பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரியாத வயதில் காமத்தை சுமந்து, வெளியில் சொல்லா முடியா வாழும், பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல, பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான ஒரு பாடம். இயக்குநரின் இயக்கமும், ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களை கலங்கடித்து விட்டது. இந்த ’பொன்மகள் வந்தாள்’ கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் டிரைலரை இதுவரை சுமார் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியா வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்.. இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள்
— Bharathiraja (@offBharathiraja) May 28, 2020
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...