தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்த சந்தானம், தற்போது தமிழ் சினிமாவின் வசூல் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் வசூலில் சக்கை போடு போட, கடந்த ஆண்டு வெளியான ‘A1' திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
தற்போது ‘டிக்கிலோனா’, ‘பிஸ்கோத்’ ஆகிய படங்கள் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் நிலையில், ‘டிக்கிலோனா’ படத்தின் பஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில், இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் சந்தானம் நிர்வாண கோலத்தில், மறைக்க வேண்டியதை மட்டும் மறைத்தபடி நின்றுக்கொண்டிருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் சிறிது சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இதன் பின்னணியில் ஒரு முக்கியமான சமாச்சாரம் இருப்பதாக தகவல் ஒன்று கசிகிறது. அதாவது, இப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு வேடத்திற்கு சிக்ஸ் பேக் உடல் அமைப்புடன் தோன்றுகிறாராம்.
அதற்காக கடந்த சில மாதங்களாக கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் சந்தானம் ஈடுபட்டிருக்கிறாராம். தற்போதைய செகண்ட் லுக் சற்று சர்ச்சையை ஏற்படுத்தினாலும் விரைவில் வெளியாக உள்ள சிக்ஸ் பேக் உடல் புகைப்படம் பெரும் வரவேற்பு பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், பரத், அதர்வா, அருண் விஜய், ஆர்யா ஏன் காமெடி நடிகர் சூரி கூட சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த சிக்ஸ் பேக் வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு முறை உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்று நடிகர் சூர்யா கூறியிருக்கிறார்.

இனி ஒரு முறை சிக்ஸ் பேக் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நான் நிச்சயம் வைக்க மாட்டேன். அதனால், எந்த நடிகரும் சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்க வேண்டாம், என்றும் நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி, தற்போது நடிகர்களுக்கு இருந்த சிக்ஸ்பேக் மோகம் குறைந்துவிட்ட நிலையில், தற்போது சந்தானத்திற்கு அந்த மோகம் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் உண்மையா அல்ல காத்துவாக்குல பரவும் வதந்தியா என்பது தெரியவில்லை. ‘டிக்கிலோனா’ படத்தின் மூன்றாம் லுக் போஸ்டர் வந்த பிறகு இது பற்றிய உன்மை தெரிய வரும்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...