பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களால் அறியப்பட்டவர்களில் மீரா மிதுனும் ஒருவர். மாடலிங் துறையைச் சார்ந்த இவர், தமிழ் சினிமாவில் நடிகையாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ‘8 தோட்டாக்கள்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், எதிர்ப்பார்த்த சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
இதற்கிடையே, அழகு போட்டி நடத்தும் முயற்சியில் இறங்கிய மீரா மிதுன், அதன் மூலம் பலரிடம் பணம் மோசடி செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால், சர்ச்சையானவராக அறியப்பட்ட மீரா மிதுனுக்கு இந்த சமயத்தில் தான் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஆரம்பத்தில் ரசிகர் வட்டம் இருந்தாலும், இவர் நிகழ்ச்சியில் நடந்துக் கொண்ட விதம் மற்றும் இயக்குநர் சேரன் மீது பழி சுமத்தியது உள்ளிட்ட பிரச்சினையால் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் சரியான சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருந்த மீரா மிதுன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான ஊதியம் தனக்கு வழங்கப்படவில்லை, என்று விஜய் டிவி மீது குற்றம் சாட்டியதோடு, அது தொடர்பாக தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தும் வந்தார்.
மேலும், சமூக வலைதளங்களில் சர்ச்சையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தன்னைப் பற்றிய செய்திகள் பரவும்படி பார்த்துக் கொண்ட மீரா மிதுன், கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருந்தார்.
இந்த நிலையில், மணமகள் கோலத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் மீரா மிது, இது ஒரிஜினல் தான், காப்பி என்று சொல்லிவிடாதீர்கள், என்று கூறியிருப்பதோடு, விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறேன், என்றும் தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ,
Soon ♥️
— Meera Mitun (@meera_mitun) May 29, 2020
( This is REAL. Don't copy this too ) pic.twitter.com/uOU6BsyY9S
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...