தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், அவர் நடித்த சில படங்களை கொரோனா பிரச்சினைக்கு பிறகு ரிலீஸ் செய்யும் முயற்சியில் நடைபெற்று வருகிறது.
திரைப்பட பின்னணி வேலைகள் தொடங்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து பல படங்களின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பின்னணி வேலைகள் தொடங்கியிருக்கிறது. அதன்படி, யோகி பாபு நடித்த சில படங்களின் பின்னணி வேலைகளும் தொடங்கியுள்ள நிலையில், அப்படங்களின் தயாரிப்பாளர்கள் யோகி பாபுவை டப்பிங்கிற்கு அழைத்தால், அவர் வர மாட்டேன், என்று கூறுகிறாராம்.
மேலும், அப்படங்களில் நடிக்கும் போது தான் குறைவான சம்பளம் வாங்கியதாகவும், தற்போது தனது மார்க்கெட் அதிகரித்திருப்பதால், டப்பிங்கிற்காக தனி ஒரு தொகையை தனக்கு கொடுத்தால் தான், டப்பிங் செய்வேன், என்று கூறும் யோகி பாபுவால் அப்படங்களின் தயாரிப்பாளர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
கொரோனா பிரச்சினையில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த திரைப்படங்கள் கூட குறித்த நேரத்தில் வெளியிட முடியாமல் இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் யோகி பாபுவின் இந்த பேராசையால் திரைத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், நடிப்பவர்கள் தான் அந்த கதாப்பாத்திரங்களுக்கு டப்பிங் பேசுவது வழக்கம். அதற்காக தனியாக சம்பளமும் கொடுக்கப்படுவதில்லை. அப்படி இருக்க யோகி பாபுவின் இந்த திடீர் முடிவு அநியாயமானது என்று கூறும் தயாரிப்பாளர்கள் அவர் மீது பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் புகார் கூறியிருக்கிறார்களாம்.
தற்போது, யோகி பாபு மற்றும் தயாரிப்பாளர்கள் இரு தரப்பையும் அழைத்து ஆர்.கே.செல்வமணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...