ஜோதிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கத்தில் ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்து தவறான சித்தரிப்பு இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், “படத்தில் AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம்.
இந்தத் திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களில் இருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...