கொரோனா ஊரடங்கால் சினிமா துறை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, எப்போது பழைய நிலைக்கும் திரும்பும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இதற்கிடையே, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்ற முதல்வர் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பை தொடங்க அனுமதி அளித்தார். அதே சமயம், நடிகர், நடிகைகள் உள்ளிட்டவர்களை சேர்ந்து 20 நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
ஆனால், இந்த கட்டுப்பாடுகளோடு படப்பிடிப்பு நடத்துவதி சாத்தியமில்லை என்பதால், அரசு கடந்த மே 21 ஆம் தேதி அனுமதி அளித்த பிறகும் சீரியல்களின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. காரணம், 20 நபர்களை மட்டுமே வைத்துக் கொண்டு பணியாற்றுவது நடக்காது ஒன்று என்பதால் தான்.
இந்த நிலையில், தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புக்கு 60 நபர்களை வைத்துக் கொள்ளலாம், என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், சென்னையில் படப்பிடிப்பு நத்த வேண்டும் என்றால் மாநகராட்சி ஆணையரிடமும், பிற பகுதிகளில் நடத்த, அந்த பகுதி மாவட்ட ஆட்சியர்களிடமும், ஒரு சீரியலுக்கு ஒரு முறை மட்டும் அனுமதி வாங்கினால் போதும், என்றும் அறிவித்திருக்கிறார்.
முதல்வரின் இத்தகைய அறிவிப்பால் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் இன்றி சினிமா தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...