பெயரை மிஸ்யூஸ் செய்கிறார்கள்! - இயக்குநர் விஷ்ணுவர்தன் வருத்தம்
Saturday May-30 2020

’அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கும் விஷ்ணு வர்தன், தற்போது இந்தியில் கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை ‘ஷேர்ஷா’ என்ற தலைப்பில் இயக்கி வருகிறார்.

 

ஜூலை மாதம் வெளியாக வேண்டிய இப்படம், கொரோனா பிரச்சினை காரணமாக தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இயக்குநர் விஷ்ணுவர்தன் பெயரில் இல விசமிகள் தவறாக பயன்படுத்துவதாக, அவர் குற்றம் சாட்டியுள்ளார். சினிமா பிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளப் பக்கங்களை ஆரம்பித்து, அதன் மூலம் சில தவறான கருத்துக்களை பரப்புவதை, சில மர்ம நபர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதனால் சம்மந்தப்பட்ட பிரபலங்கள் பலரது எதிர்ப்புகளுக்கு ஆளாகும் சூழலும் ஏற்படுகிறது.

 

அப்படி ஒரு பிரச்சினை இயக்குநர் விஷ்ணு வர்தனுக்கு வந்திருக்கிறது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இயக்குநர் விஷ்ணுவர்தன் பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றில் எந்தவிதமான கணக்கும் விஷ்ணுவர்தனுக்கு இல்லை என்பது தான் உண்மை. அவர் ட்விட்டர் பக்கத்தில் மட்டுமே இருக்கிறார்.

 

இது குறித்து விளக்கம் அளித்த இயக்குநர் விஷ்ணு வர்தன், “ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை நான் பயன்படுத்தவில்லை. ஆனால், எனது பெயரில் இதுபோன்ற சமூக வலைதளப் பக்கங்களை சிலர் உருவாக்கி, என் பெயரை மிஸ்யூஸ் செய்கிறார்கள். அதனால், யாரும் இந்த பக்கங்களை பின் தொடர வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Vishnuvardhan

Related News

6639

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery