கொரோனா ஊரடங்கில் சினிமா நட்சத்திரங்களின் இறப்பு தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. ரிஷி கபூர், இர்பான்கான் என பாலிவுட் நட்சத்திரங்கள் மரணமடைந்த நிலையில், பிரபல பாலிவுட் சினிமா பாடலாசிரியரான யோகேஷ் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 77.
1962 ஆம் ஆண்டு முதல் இந்தி சினிமாவில் பாடலாசிரியராக பணியாற்றி வரும் யோகேஷ், பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். இறுதியாக 2018 ஆம் ஆண்டு வெளியான ’அங்ரேஷி மெய்ன் கெஹ்தே ஹய்ன் (Angrezi Mein Kehte Hain) என்ற படத்தில் பாடல் எழுத்யிருந்த யோகேஷ், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், மும்பையில் உள்ள தனது வீட்டில் யோகேஷ் இன்று மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு பாலிவுட் பாடலாசிரியர் ஜாவத் அக்தர், பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து அருகிறார்கள்.

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...