தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த சமந்தா, பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வந்தார். அவருடன் கோவில் உள்ளிட்ட பொது இடங்களுக்கு சென்று வந்தவர், திடீரென்று அவரை பிரிந்த நிலையில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் சமந்தா நடிப்பில் வெளியான தெலுங்குப் படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்று வருவதால், அவருக்கு தெலுங்குப் பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், சமந்தா கவர்ச்சி உடையில் சிம்புவுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்டதாகும்.
சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த சமந்தா, சிம்புவின் மற்றொரு படமான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். மேலும், அப்படத்திற்கு நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டிலும் கலந்துக் கொண்ட நிலையில், அவர் திடீரென்று படத்தில் இருந்து விலகிவிட்டார்.
தற்போது, சிம்பு, சமந்தா இடம்பெற்ற ‘அச்சம் என்பது மடமையடா’ போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...