தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, தனக்கென்ற தனி பாணியுடன் பயணிக்கிறார். இவரது இசைக்கும், குரலுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆன்மீகத்திலும், இந்து மதத்திலும் அதிக ஈடுபாடு கொண்ட இளையராஜாவின் இளையமகனான இவர், இஸ்லாம் மதத்திற்கு மாறியது அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. இருப்பினும், இது குறித்து யுவன் சங்கர் ராஜா மவுனம் காத்து வந்தார்.
இந்த நிலையில், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? என்று யுவன் சங்கர் ராஜா முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு சுஜயா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட யுவன், அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில், 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டவர், அவரையும் விவாகரத்து செய்தார். இதையடுத்து, 2015 ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்ற இஸ்லாம் பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.
சமூக வலைதளத்தில் யுவனின் மனைவி ஜப்ருன் நிஷாவிடம் ரசிகர் ஒருவர், யுவனை இஸ்லாம் மதத்திற்கு மாற சொல்லி நீங்கள் நிர்பந்தித்தீர்களா? என்று கேட்க, அதற்கு அவர், என்னை திருமணம் செய்வதற்கு முன்பாகவே யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார். மேலும், இதுபோன்ற கேள்விகளுக்கு அவரே நேரடியாக விரைவில் பதில் அளிப்பார், என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? என்பதற்கு சமூக வலைதளம் மூலம் விளக்கம் அளித்த யுவன், இஸ்லாம் மதத்தில் அமைதி போதிக்கப்படுகிறது. அது தான் என்னை ஈர்த்தது. மேலும், நாம் இறந்த பிறகு நமது ஆத்மா எங்கே போகிறது?, ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு இருப்பது ஏன்? போன்ற கேள்விகளுக்கு குரானில் நேரடியாக பதில் கிடைத்ததாக நான் உணர்ந்தேன், அதனால் தான் இஸ்லாம் மதத்திற்கு மாறினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...