கொரோனா பாதிப்பு! - கோலிவுட் நடிகை வீட்டுக்கு சீல்
Monday June-01 2020

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் தினந்தோறும் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

 

இதற்கிடையே, பிரபல நடிகை குஷ்பூவின் நெருங்கிய உறவினர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சினிமா பிரபலங்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், வேறு மாவட்டத்திற்கு பயணித்துள்ள சில சினிமா பிரபலங்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில், பிரபல தமிழ் நடிகைகளில் ஒருவரான பிந்து மாதவி, கொரோனா பாதிப்பால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், கொரோனா தொற்று அவருக்கு ஏற்படவில்லை. அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதையடுத்து, அந்த முழு அடுக்குமாடி குடியிருப்பையும் மாநகராட்சி ஊழியர்கள் அலுமினிய ஷீட் போட்டு அடைத்ததோடு, அந்த குடியிருப்பில் இருக்கும் அனைத்து குடியிருப்புவாசிகளையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

 

Actress Bindu Madhavi

 

இதனால், நடிகை பிந்து மாதவி 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். 

 

தெலுங்கு நடிகையான பிந்து மாதவி, 2009 ஆம் ஆண்டு வெளியான ‘பொக்கிஷம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ’வெப்பம்’, ‘கழுகு’,’தேசிங்கு ராஜா’, ’ஜாக்சன் துரை’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர், தற்போது ‘மாயன்’, ‘கழுகு 2’, ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

 

இதோ அவரது அறிவிப்பு,

 

 

Related News

6647

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery