மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வரும் விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’-விலும் நடித்து வருகிறார். ‘கோப்ரா’ படத்தின் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.
இதற்கிடையே, கொரோனா பிரச்சினையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு, கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்து படப்பிடிப்புகள் தொடங்கினாலும் தொடங்காது என்று கூறப்படுகிறது. இதனால், அப்படத்தில் நடித்த பல நடிகர்கள் தற்போது வேறு படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், நடிகர் விக்ரமும் தனது புதிய படத்தில் கவனம் செலுத்த தொடங்கியிருப்பதாகவும், இதற்காக பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், விக்ரமின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ரஜினியை வைத்து ‘பேட்ட’ படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், டாப் இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்ததோடு, தனுஷை வைத்து ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கியிருக்கிறார்.

இதனால், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் விருப்பம் தெரிவித்த நிலையில், அவர் விக்ரமை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...