கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்று பலர் கனவு கண்டாலும், அது கனவாகவே இருந்த நிலையில், அதை நினைவாக்கியது இயக்குநர் மணிரத்னம் தான். முன்னணி நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார். ஆனால், கொரோனாவால் தற்போது படப்பிடிப்பு நின்றுவிட்டது.
இதற்கிடையே, மிகப்பெரிய போர்க்கள காட்சிகள் படத்தில் இருப்பதால், கொரோனா பிரச்சினை சற்று ஓய்ந்து படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கினாலும், ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை தொடங்க முடியாதாம். காரணம், நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் மற்றும் குதிரை, யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும், என்பதால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த பிறகே அது சாத்தியம் என்பதால், இப்போதைக்கு ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று மணிரத்னத்திற்கே புரியாத புதிர் தான்.
இதனால் தான், படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த விக்ரம் பிரபு, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பலர் வேறு படங்களுக்கு நடிக்க சென்று விட்டனர். தற்போது மணிரத்னமே புதிய படம் ஒன்றில் கவனம் செலுத்த தொடங்கியிருப்பதாகவும், அப்படம் ‘ரோஜா’-வின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ரோஜா’ தேசிய விருதும் பெற்றது. காஷ்மீர் பிரச்சினையை மையமாக கொண்டு உருவான இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளாராம்.
தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் தங்களது வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கும் நிலையில், தற்போது மணிரத்னமும் அதில் களம் இறங்கியிருக்கிறார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...