Latest News :

ஆபாச வீடியோ சர்ச்சை! - மனம் திறந்த லொஸ்லியா
Monday June-01 2020

பிக் பாஸ் சீசன் 3-யில் போட்டியாளராக கலந்துக் கொண்ட லொஸ்லியா விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களம் இறங்க உள்ளார். இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் லொஸ்லியா, தனது திரைப்படங்கள் ரிலீஸாவதற்கு முன்பே ரசிகர்களின் கனவு கண்ணியாகியிருக்கிறார்.

 

பிக் பாஸ் மூலம் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருப்பதோடு, சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் இளைனர்களின் மனம் கவர்ந்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இதால், அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியான சில நிமிடங்கள் ஓடும் ஆபாச வீடியோ ஒன்றில் இருப்பது லொஸ்லியா என்று கூறப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, அந்த வீடியோவும் வைரலானது. ஆனால், இதை மறுத்த லொஸ்லியா ரசிகர்கள் அது லொஸ்லியா இல்லை, என்று கூறினார்கள். அது தான் உணமையும் கூட. இருப்பினும் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதங்கள் நடைபெற்றதோடு, பலர் அந்த வீடியோவை ஷேர் செய்யுமாறும் கேட்டார்கள். இப்படி பல வழிகளில் அந்த ஆபாச வீடியோவுடன் லொஸ்லியா பெயர் ஒட்டிக் கொண்டது.

 

யாரோ ஒருவருடைய ஆபாச வீடியோவை வைத்து லொஸ்லியாவின் பெயர் டேமேஜ் ஆக, லொஸ்லியாவோ அது குறித்து எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தவர், கொரோனா பிரச்சினையால் இலங்கைக்கு சென்று விட்டவர், தற்போது தனது குடும்பத்துடன் ஊரடங்கு நாட்களை கழித்து வருகிறார்.

 

Losliya

 

இந்த நிலையில், தனது இமேஜுக்கு கலங்கம் ஏற்படுத்திய அந்த ஆபாச வீடியோ குறித்து முதல் முறையாக லொஸ்லியா பேசியிருக்கிறார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பொய்கள் நிறைந்த உலகில் வாழ்கிறோம். அனைவரது வாழ்விலும் சில பிரகாசமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் நமக்கு உள்ளே உள்ள ஆன்மாவுடன் மட்டுமே தனித்து இருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்கிறோம். உலகம் பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களால் நிறைந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் மாற வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்” என்று தெரிவுத்துள்ளார்.

 

ஏற்கனவே, பிக் பாஸ் கவின் வெளியிட்ட பதிவு ஒன்றுக்கு பதிலடி கொடுத்து, அவருடனான உறவு முறிந்துவிட்டதை சூசகமாக தெரிவித்த லொஸ்லியா, தற்போது ஆபாச வீடியோ மூலம் தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த நினைத்தவர்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

Related News

6651

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery