சினிமா நட்சத்திரங்கள் சர்ச்சையான விவகாரங்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அதிலும், அவர்களுடைய திருமண வாழ்க்கை என்பது, புரியாத புதிராகவே இருக்கும். பெரும்பாலான சினிமா நடிகர்களின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவதும் வழக்கமான ஒன்றானதோடு, மறுமணம் என்பது அவர்களுக்கு சாதாரணமான ஒன்றாகும்.
இதற்கிடையே, ஹாலிவுட் சினிமா மற்றும் சீரியல் நடிகையான பமீலா ஆண்டர்சன், ஏற்கனவே மூன்று பேரை திருமணம் செய்து பிரிந்த நிலையில், தற்போது நான்காவது திருமணத்திற்கு ரெடியாகியுள்ளார். அவருக்கு வயது 52 என்பது மற்றொரு அதிச்சியான செய்தி.

மாடலிங் மற்றும் நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இந்த 52 வயது நடிகை, டாமி லீ, பாப் ரிட்சி, ரிக் சாலமன் என மூன்று பேரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போது மூவரையும் பிரிந்து தனிமையில் வாழ்பவர், நான்காவதாக திருமணம் செய்துக் கொள்ள ஆசையாக இருக்கிறது, என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டியில் பேசிய அவர், கடந்த போன என்னுடைய வாழ்க்கை உறவுகள் தோல்வியடைந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். நான் மூன்று முறை தான் திருமணம் செய்துள்ளேன். கடவுளே, இன்னும் ஒரே ஒரு முறை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும், என்று வேண்டிக் கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...