தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர், ‘இந்தியன் 2’, ‘பொம்மை’, ‘குறத்தி ஆட்டம்’, ’களத்தில் சந்திப்போம்’, ‘கசட தபர’, விஷாலுக்கு ஜோடியாக ஒரு படம் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.
சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். தன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சோசியல் மீடியாக்களில் பகிர்வதோடு, ரசிகர்களுடம் அவ்வபோது கலந்துரையாடல் செய்வது, கருத்து தெரிவிப்பது என்று இருப்பார்.
அந்த வகையில், பிரியா பவானி சங்கர் ஒரு விஷயம் குறித்து சமீபத்தில் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவிக்க, அவரது கருத்து பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டார். அப்பெண்ணின் எதிர்ப்புக்கு பிரியா பவானி சங்கர், அமைதியான முறையில் விளக்கம் அளிக்க, அவரது ரசிகர்களோ, அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கமெண்ட் போட்டார்கள்.
இந்த நிலையில், தனது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை தகாத வார்த்தையில் கமெண்ட் அடித்த தனது ரசிகர்களை கடுமையாக சாடியிருக்கும் பிரியா பவானி சங்கர், ”எனக்கு ஆதரவாக பேசுவதற்காக மற்றொருவரை இழிவாக பேசுவதை நான் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...