காமெடி, நடிப்பு, ஆக்ஷன், ரொமான்ஸ் காட்சிகள் என்று அனைத்திலும் ஆல் ரவுண்டரான விஜய், நடனத்தில் ஏ ஒன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு தமிழ் சினிமாவில் நல்லா நடனம் ஆட தெரிந்த முன்னணி ஹீரோக்களில் முன்னணியில் இருக்கிறார்.
இதற்கிடையே, ‘மெர்சல்’ படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தும், நடனமும் ஆடியுள்ள காஜல் அகர்வால், அவரால் ரொம்ப கஷ்ட்டப்பட்டுவிட்டாராம்.
’துப்பாக்கி’, ‘ஜில்லா’ என்று இரண்டு முறை விஜயுடன் ஜோடி போட்ட காஜல் அகர்வால் மூன்றாவது முறையாக ‘மெர்சல்’ படத்தின் மூலம் இணைந்திருக்கிறார். இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாக உள்ளது.
இந்த நிலையில், விஜயுடன் நடிக்கும் அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறிய காஜல் அகர்வால், “விஜய்யுடன் நடனமாடுவது நல்ல அனுபவம். அதேசமயம் கொஞ்சம் கஷ்டமானதும் கூட. சில நடன அசைவுகளை ரொம்ப வேகமாக செய்து விடுவார். அதனால், அந்த மாதிரியான நடன அசைவுகளுக்கு முன்பாக அவருடன் இணைந்து ரிகர்சல் பார்த்துக்கொள்வேன். இல்லையேல், பல ரீ-டேக்குகள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...