தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகைகளில் நீலிமா ராணியும் ஒருவர். இவர், திரைப்பட நடிகையாக அறியப்பட்டதை விட, சின்னத்திரை நடிகையாக தான் மக்களிடம் பிரபலமானார். ’தேவர் மகன்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர், ’பாண்டவர் பூமி’, ‘விரும்புகிறேன்’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிறகு ‘தம்’, ‘திமிரு’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளின் தோழியாக நடித்தவருக்கு தொடர்ந்து அப்படிப்பட்ட வேடங்களே அமைந்தது.
இதற்கிடையே, 2002 ஆம் ஆண்டு ’ஆசை’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சீரியல் உலகிற்குள் நுழைந்தவர் ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானார். அதை தொடர்ந்து ‘கோலங்கள்’, ‘அத்திப்பூக்கள்’, ’தென்றல்’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்ததோடு, இரண்டு டிவி தொடர்களையும் தயாரித்திருக்கிறார்.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நீலிமா ராணி, 21 வயதில் திருமணம் செய்துக் கொண்டார். இளம் வயதில் திருமணம் செய்துக் கொண்ட நீலிமா ராணி, சினிமாவில் பல வருடங்களாக பயணித்து வந்தாலும், இதுவரை எந்த ஒரு படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நீலிமா ராணியிடம் கேட்ட போது, “கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று நான் எப்போதும் எண்ணியதில்லை. அதை எனது லட்சியமாகவும் கொண்டு நான் பயணிக்கவில்லை. அதனால் தான் அதற்காக நான் முயற்சிக்கவில்லை. அப்படி கதாநாயகியாக நடிக்க வேண்டும், என்று நான் விரும்பியிருந்தால் 21 வயதில் திருமணம் செய்துக் கொண்டிருக்க மாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாக களம் இறங்கிய நீலிமா ராணி, அதற்காக பல போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...