மறைந்த முன்னால் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 97 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா ஊரடங்கினால் திமுக தொண்டர்கள் கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடவில்லை.
இந்த நிலையில், இயக்குநர் சுசீந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கலைஞரின் பிறந்தநாளுக்காக வெளியிட்டுள்ள பதிவில், தமிழர்களின் உண்மையான தலைவர் கலைஞர் கருணாநிதி” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழர்களின் உண்மையான தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 97 வது பிறந்தநாள் இன்று...
தமிழன் இந்த பூமியில் வாழும்வரை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சாதனை சுவடுகள் என்றும் மறையாது...
நீங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்த நற்தொண்டுகளை என்றும் நினைவில் கொள்வோம்...
உங்களை வணங்குகிறோம்.
சுசீந்திரன் மற்றும் இடும்பத்தினர்.” என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...