கொரோனா ஊரடங்கினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவாசிய தேவைகளை கூட சரியாக பூர்த்தி செய்துக் கொள்ள முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அரசு மக்களுக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை. மூன்று மாத இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் ரூ.1000 நிவாரண தொகை வழங்கியதோடு நிறுத்திக் கொண்டது.
அதே சமயம், மின்சாரக் கட்டணம், தண்ணீர் வரி உள்ளிட்ட கட்டணங்களை மக்களிடம் இருந்து வசூலிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. தொகை கட்டுவதற்கான கால அவகாசத்தை சில வாரங்கள் நீட்டித்ததை தவிர, கட்டணத்தில் குறைப்பு, ரத்து போன்றவைகளை அரசு செய்யவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை மக்களிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக நடிகர் பிரசன்னா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அதாவது, மின்சார கட்டணம் முன்பை விட தற்போது பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ”தமிழ்நாடு மின்சார வாரியம் நல்லா கொள்ளை அடிக்குறாங்க, இதை உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள்?” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரசன்னாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் பதில் அளித்து வருகிறார்கள். அதில் பலர், மின்சார வாரியத்தை விமர்சித்தும் வருகிறார்கள்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...