இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும், சினிமா நட்சத்திரங்களும், அவர்களது குடும்பத்தாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடித்த ’ஏபிசிடி’ என்ற இந்தி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த மோஹனா குமாரி சிங்கும் கொரோனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
திரைப்படங்கள் மட்டும் இன்றி பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் மோஹனா குமாரி சிங், டேராடூனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக மோஹனா குமாரி சிங்கின் மாமியாருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, குடும்பத்தார் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது, நடிகை மோஹனா குமாரி உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, நடிகை மோஹனா குமாரி சிங்கின் குடும்பத்தார் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்களது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...